அமெரிக்க ஓபன் டென்னிஸ்; 3வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்ட கலின்ஸ்காயா

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.;

Update:2024-09-01 19:25 IST

image courtesy; AFP

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான ரஷியாவின் அன்னா கலின்ஸ்காயா, பிரேசிலின் பீட்ரிஸ் ஹடாத் மியா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் அன்னா கலின்ஸ்காயா 3-6, 1-6 என்ற செட் கணக்கில் பீட்ரிஸ் ஹடாத் மியாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு 3வது சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார். 

Tags:    

மேலும் செய்திகள்