இன்றைய ராசிபலன் (13-12-2025): முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் நாள்..!

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.;

Update:2025-12-13 06:21 IST

இன்றைய பஞ்சாங்கம்

கிழமை: சனிக்கிழமை

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்: கார்த்திகை

நாள்: 27

ஆங்கில தேதி: 13

மாதம்: டிசம்பர்

வருடம்: 2025

நட்சத்திரம்: இன்று காலை 10-30 வரை உத்திரம் பின்பு அஸ்தம்.

திதி: இன்று இரவு 08-49 வரை நவமி பின்பு தசமி

யோகம்: மரண யோகம்

நல்ல நேரம்: காலை 07-45 to 08-45

நல்ல நேரம்: மாலை 4-45 to 5-45

ராகு காலம்: காலை 9-00 to 10-30

எமகண்டம்: மாலை 1-30 to 3-00

குளிகை: காலை 6-00 to 7-30

கௌரி நல்ல நேரம்: காலை 10-45 to 11-45

கௌரி நல்ல நேரம்: மாலை 9-30 to 10-30

சூலம்: கிழக்கு

சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்

இன்றைய ராசிபலன்

மேஷம்

பூர்வீக சொத்தில் பணவரவு உண்டு. பிள்ளைகள் சொல்படி நடப்பர். எதிரிகள் தொலைவர். உடன்பிறந்தோர் இணக்கத்துடன் இருப்பர். பணியாளர் கேட்ட கடனுதவி கிடைக்கும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். கணவரின் பாசத்தில் திளைப்பர். உடல் நலம் தேறும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

ரிஷபம்

வியாபாரத்தில் இடையூறுகள் விலகும். புது நபர் நண்பராவர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பண வரவு அதிகரிக்கும்; அரசு வேலைகள் எளிதாக நடக்கும். வேலையாட்களின் பணிகள் சிறப்புறும். வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மிதுனம்

உங்களுக்கு எதிரான வழக்குகள் தோற்கும். விலகிப்போன உறவினர்கள் நட்பாவர். அக்கம் பக்கத்தவர் அன்பு பாராட்டுவர். செயல்களில் நேர்த்தி இருக்கும். உடன்பிறந்தோருக்கு உதவுவீர்கள். யாரிடமும் பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம். மாணவர்களின் பதற்றம் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கடகம்

சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். விவசாயிகளுக்கு லாபம் கிட்டும். மனைவியிடம் விட்டுக்கொடுப்பது நல்லது. போட்டிகளை சமாளித்து தொழில் செய்வீர்கள். வரவு, செலவில் கவனமாக இருக்கவும். மாணவர்கள் படிப்பில் அதிக முன்னேற்றம் காண்பர். தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

சிம்மம்

தாய்வழி உறவினர் உதவுவர். பிள்ளைகளின் செயலில் கவனம் தேவை. விலகிப் போன துணை திரும்பி வருவார். நண்பர்களின் அன்பு அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர். நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். உடல் நலனில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கன்னி

பயணத்தில் உடைமைபின் மீது கவனம் வேண்டும். கலைஞர்கள் பாராட்டு பெறுவர். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளிடம் மனக்கசப்புகள் உண்டாகலாம். பிள்ளைகள் பெருமை சேர்ப்பர். மாணவர்கள் கோப்பையை வெல்வர். தேகம் பலம் பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

துலாம்

வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் பிரச்சினைகள் எதுவும் இருக்காது. எனினும் புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. சக பணியாளர்கள் ஒத்துழைப்பார்கள். என்றாலும் ஆர்டர்கள் குவியும். சமூக நல ஆர்வலர்களுக்கு மக்களிடம் பாராட்டும் நன்மதிப்பும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை

விருச்சிகம்

தம்பதிகளின் மனஸ்தாபம் நீங்கும். சகோதரவழியில் பிரச்சினை வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். புதிய சொத்துக்கள் சேரும். பழைய பாக்கி கைக்கு வரும். மனையில் இருந்த சிக்கல் விலகும். புதிய கிளைகளை துவங்குவர். உடல் பொலிவினைக் கூட்டும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

தனுசு

வெளியூர் பயணம் மகிழ்ச்சி தரும். சமூகப் பணிகளில் ஆர்வம் கொள்வீர்கள். ஆவணங்களை பிறர் பொறுப்பில் தர வேண்டாம். வீட்டுக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள்.மனைவியின் செயல்களை பாராட்டுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

மகரம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கும்பம்

தொழிலில் தேக்கம் குறையும். விவசாயிகள் குத்தகை எடுப்பர். தம்பதிகளுக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் ஆர்வக் கோளாரை கவனியுங்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். விற்பனை பிரதிநிதிகளுக்கு ஆர்டர்கள் குவியும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மீனம்

குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். புதிய மாற்றங்கள் தென்படும். திடீர் செலவு உண்டு. சொத்து பத்திரங்களை கவனமுடன் கையாளுங்கள். ஒற்றைத் தலைவலி உண்டாகும். மாணவர்கள் பெருமை சேர்ப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்




 

Tags:    

மேலும் செய்திகள்