ரஷிய-உக்ரைன் போர் நாளையுடன் 100-வது நாளை... ... #லைவ் அப்டேட்ஸ்: ரஷியாவை கட்டுபடுத்த அதி நவீன ஈகிள் டிரோன்களை விற்பனை செய்யும் அமெரிக்கா


ரஷிய-உக்ரைன் போர் நாளையுடன் 100-வது நாளை எட்டுகிறது. இந்த நிலையில் கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகளை எதிர்கொள்ள உக்ரைனுக்கு உயர் தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன ஏவுகணை அமைப்புகளை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், புதிய ஏவுகணைகள், முக்கிய இலக்குகளை இன்னும் துல்லியமாக தாக்க உதவும் என்றார்.

700 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5,421 கோடி) மதிப்பிலான ஆயுத தொகுப்பு உக்ரைனுக்கு வழங்கப்பட இருப்பதாக ஜோ பைடன் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் இருவர் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், ‘இந்த ஆயுத தொகுப்பில் ‘எம்142 ஹிமார்ஸ்’ என்கிற அதிநவீன ஏவுகணை அமைப்பும் அடங்கும். இதன் மூலம் 70 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் பல ஏவுகணைகளை ஒரேசமயத்தில் ஏவ முடியும். இதுதவிர நவீன ஹெலிகாப்டர்கள், பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் பிற ராணுவ தளவாடங்களின் உதிரி பாகங்கள் ஆகியவையும் வழங்கப்படுகின்றன’ என்றனர்.

Update: 2022-06-01 21:38 GMT

Linked news