கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தை... ... #லைவ் அப்டேட்ஸ்: ரஷியாவை கட்டுபடுத்த அதி நவீன ஈகிள் டிரோன்களை விற்பனை செய்யும் அமெரிக்கா


கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால் போர் மீண்டும் உக்கிரமடைந்து வருகிறது.

உக்ரைனின் உற்பத்தி மையமாக திகழும் தொழில் நகரமான செவிரோடொனெட்ஸ்க் நகரில் ரஷிய படைகள் வேகமாக முன்னேறி கொண்டிருக்கின்றன. இதே வேகத்தில் சென்றால் ஓரிரு நாட்களில் அந்த நகரம் முழுவதும் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டுகள் வந்துவிடும்.

அதிநவீன ஏவுகணை அமைப்பு

அந்த நகரில் ரஷிய படைகள் 24 மணி நேரமும் குண்டு வீச்சில் ஈடுபட்டு வருவதால் அந்த நகரம் உக்ரைனின் மற்றொரு மரியுபோல் நகரமாக மாறி வருவதாக அதிகாரிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

செவிரோடொனெட்ஸ்க் மட்டும் இன்றி கிழக்கு உக்ரைனில் உள்ள பல நகரங்களிலும் ரஷிய படைகளின் தாக்குதல் நாளுக்கு நாள் வேகமெடுத்து வருவதால் விவரிக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகி வருவதாக அதிகரிகள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் கிழக்கு உக்ரைன் போரில் ரஷிய படைகளை எதிர்கொள்ள உக்ரைனுக்கு உயர் தொழில் நுட்பம் கொண்ட அதிநவீன ஏவுகணை அமைப்புகளை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

Update: 2022-06-01 23:22 GMT

Linked news