உக்ரைன் மீது ரஷியா 134-வது நாளாக போர் தொடுத்து... ... #லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனில் ரஷியா தொடர்ந்து தாக்குதல் - 12 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா 134-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதனால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதனிடையே, உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள லூகன்ஸ் மாகாணம் முழுவதையும் ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து லூகன்ஸ் மாகாணத்திற்கு அடுத்த நகரங்களிம் ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது.

இந்நிலையில், உக்ரைனின் கிழக்கு நகரமான டொனெட்ஸ்க் மாகாணத்தில் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் இன்று 12 பேர் உயிரிழந்தனர். ரஷியா நடத்திய தாக்குதலில் 8 உக்ரைன் பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். அதேவேளை உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடந்து நீடித்து வருவதால் பதற்றமான சூழ்நிலை உருவாகி வருகிறது.

Update: 2022-07-07 00:02 GMT

Linked news