லுஹான்ஸ்க் மாகாணம் முழுவதுமாக ரஷிய படைகளிடம்... ... #லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனில் ரஷியா தொடர்ந்து தாக்குதல் - 12 பேர் பலி


லுஹான்ஸ்க் மாகாணம் முழுவதுமாக ரஷிய படைகளிடம் வீழ்ந்தது

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி போர் தொடுத்தது. போர் தொடங்கி 4 மாதங்களை கடந்த பின்னரும் போரின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இந்த போரில் தற்போது கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதை முக்கிய இலக்காக கொண்டு ரஷிய படைகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் பெரும்பாலான நகரங்கள் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் சூழலில், உக்ரைன் படைகளின் வசம் இருக்கும் நகரங்களை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன.

அந்த வகையில் டான்பாஸ் பிராந்தியத்தின் லுஹான்ஸ்க் மாகாணத்தில் அரசு படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த செவெரோடொனட்ஸ்க் மற்றும் லிசிசான்ஸ்க் ஆகிய இரு நகரங்களையும் அண்மையில் ரஷிய ராணுவம் கைப்பற்றியது. இதன் மூலம் லுஹான்ஸ்க் மாகாணம் முழுவதுமாக ரஷிய படைகளிடம் வீழ்ந்தது.

Update: 2022-07-07 02:30 GMT

Linked news