நெல்லை அகஸ்தியர்பட்டியில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல்... ... பா.ஜ.க.வினர் தேர்தல் பிரசாரம் செய்வதை தி.மு.க. அரசு தடுக்கிறது; பிரதமர் மோடி குற்றச்சாட்டு

நெல்லை அகஸ்தியர்பட்டியில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது,

தி.மு.க.வும், காங்கிரசும் தமிழ்நாட்டு நலனுக்கு விரோதமாக கச்சத்தீவை வேறொரு நாட்டுக்கு கொடுத்துவிட்டனர். கச்சத்தீவை தாரைவார்த்தது மன்னிக்க முடியாத பாவம். குடும்ப அரசியலை ஆதரிக்கும் கட்சியின் ஊழல் ஆட்சியால் தமிழ்நாடு துன்பப்படுகிறது. போதைப்பொருள் விற்பவர்களுக்கு எதிராக பா.ஜ.க. நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.

பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் தேர்தல் பிரசாரம் செய்வதை தி.மு.க. அரசு தடுக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை வெற்றியை கொடுத்து புதிய வரலாறு படைக்க தமிழ்நாடு தயாராக உள்ளது. உங்கள் கனவுகளே எங்கள் நோக்கங்கள். பா.ஜ.க. கூட்டணிக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள்

இவ்வாறு அவர் கூறினார்.

Update: 2024-04-15 12:46 GMT

Linked news