கீவ், நாட்டின் மிகப்பெரிய ரஷிய சார்பு அரசியல்... ... லைவ் அப்டேட்ஸ்: மைகோலேவ் மற்றும் ஒடேசா நகரத்தை பார்வையிட்ட ஜெலென்ஸ்கி

கீவ்,

நாட்டின் மிகப்பெரிய ரஷிய சார்பு அரசியல் கட்சிக்கு உக்ரைன் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. உக்ரைனின் இறையாண்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதற்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள ரஷிய சார்பு அரசியல் கட்சியின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு சேவைகளில் ரஷியாவிற்கு ஆதரவாக இருப்பதாக அடையாளம் காணப்பட்ட தரப்புகளை தடை செய்ய அதிபர் ஜெலென்ஸ்கி கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டு இருந்தார். இதை தொடர்ந்து இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

Update: 2022-06-20 12:04 GMT

Linked news