உக்ரைனில் சிக்கிய லட்சக்கணக்கான டன் தானியங்கள்; விடுவிக்க ஐரோப்பிய யூனியன் ஆலோசனை



கீவ்,

உக்ரைன் மீது ரஷியா 117வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சிவிரோடோனெட்ஸ்க் அருகே உள்ள மெடோல்கைன் என்ற கிராமம் ஒன்றை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, ரஷியா போரை தீவிரப்படுத்த கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய யூனியனுடன் உக்ரைன் இணையும் முடிவை பற்றிய அறிவிப்புக்காக கீவ் நகரம் காத்திருக்கிறது என்று அவர் கூறியுள்ளர்.

உக்ரைனின் துறைமுகங்களை ரஷியா ஆக்கிரமித்து தடுத்து நிறுத்தியதில், தானிய ஏற்றுமதி தடுக்கப்பட்டு உள்ளது. இதனால், சர்வதேச அளவில் உணவு நெருக்கடி ஏற்பட கூடிய அச்சம் அதிகரித்து உள்ளது. இதனால் போர் குற்ற சூழல் ஏற்பட கூடும் என்றும் ஐரோப்பிய யூனியனின் தூதர் ஒருவர் கூறியுள்ளார்.

இதேபோன்று, ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு மந்திரிகள் பங்கேற்கும், லக்சம்பர்க்கில் இன்று நடைபெறும் கூட்டம் ஒன்றில் உக்ரைனில் சிக்கி உள்ள லட்சக்கணக்கான டன் தானியங்களை விடுவிப்பதற்கான வழிகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளன.


Update: 2022-06-20 13:19 GMT

Linked news