கீவ், உக்ரைன் மீது ரஷியா 133-வது நாளாக போர்... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட பிரேசில் மாடல் அழகி ஏவுகணை தாக்குதலில் பலி

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா 133-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதனால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதனிடையே, உக்ரைனின் லூகன்ஸ் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரமான லிசிசண்ஸ்க் நகரையும் ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து லூகன்ஸ் மாகாணத்திற்கு அடுத்த நகரங்களிம் ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், லூகன்ஸ் மாகாணத்திற்கு அடுத்த பகுதியான டோனெட்க்ஸ் மாகாணத்தில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. ரஷியாவின் தாக்குதல் தீவிரமடைவதாலும், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படலாம் என்பதால் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி டொனேட்ஸ்க் மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-05 23:36 GMT

Linked news