உக்ரைன் போர்: ரஷிய படை தாக்குதலில் பிரான்ஸ் வீரர்... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட பிரேசில் மாடல் அழகி ஏவுகணை தாக்குதலில் பலி


உக்ரைன் போர்: ரஷிய படை தாக்குதலில் பிரான்ஸ் வீரர் பலி

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்து வரும் போர் 4 மாதங்களை கடந்து நீடித்துக்கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைனின் பல நகரங்களை ரஷிய படைகள் ஆக்கிரமித்துவிட்டன. ஆனாலும் உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து ரஷிய படைகளை எதிர்த்து உறுதியுடன் சண்டையிட்டு வருகின்றனர்.

இந்த போரில் உக்ரைன் வீரர்களுக்கு ஆதரவாக அந்த நாட்டு மக்களும், அங்கு வாழும் வெளிநாட்டவர்களும் கையில் ஆயுதங்களை ஏந்தி ரஷிய படைகளை எதிர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் உக்ரைன் வீரர்களுடன் கைகோர்த்து போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் உக்ரைனின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் நகரில் கடந்த வாரம் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் உக்ரைன் வீரர்களுடன் பணியில் இருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 20 வயது வாலிபர் படுகாயம் அடைந்தார். அதை தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இவர் உக்ரைனில் ரஷிய படைகளின் தாக்குதலில் உயிரிழந்த 2-வது பிரான்ஸ் வீரர் ஆவார்.

Update: 2022-07-06 02:32 GMT

Linked news