"3 பிஎச்கே" திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம்

சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘3 பிஎச்கே’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.;

Update:2025-07-05 15:40 IST

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சித்தார்த், 'மிஸ் யூ' படத்தை தொடர்ந்து '3 பிஎச்கே' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இது சித்தார்த்தின் 40-வது படமாகும். இந்த படத்தை '8 தோட்டாக்கள், குருதி ஆட்டம்' போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கி உள்ளார்.

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த்துடன் மீதா ரகுநாத், சைத்ரா, சரத்குமார் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருப்பவர்கள் தங்களுக்கென சொந்தமாக ஒரு 3 பிஎச்கே வீடு வாங்க ஆசைப்படும் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நேந்று திரையரங்குகளில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ. 1.5 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்