''இதுவரை நான் பண்ணாத கதாபாத்திரம்...''- நடிகை ரோஷினி உற்சாகம்

இப்படம் வரும் 25-ம் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-07-13 06:18 IST

சென்னை,

'தலைவன் தலைவி' பட விழாவில் நடிகை ரோஷினி உற்சாகமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள படம் 'தலைவன் தலைவி'. இது விஜய் சேதுபதியின் 52-வது படமாகும். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நித்யா மேனன், யோகி பாபு, ரோஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் 25-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகை ரோஷினி, இதுவரை பண்ணாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறினார். அவர் கூறுகையில்,

''இங்கு உங்கள் முன்னாடி நிற்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷமாக உள்ளது. இந்த படத்தில் ராகவர்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். விஜய் சேதுபதி சாரின் தங்கை கதாபாத்திரம். இதுவரை நான் பண்ணாத ரோல் இது. மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. தொடர்ந்து சப்போர்ட் கொடுங்கள். ரொம்ப நன்றி'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்