அமெரிக்காவில் பிரபல ஹாலிவுட் இயக்குனர், மனைவி கத்தியால் குத்திக்கொலை

இந்த கொலை சம்பவம் ஹாலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.;

Update:2025-12-16 07:46 IST

வாஷிங்டன்,

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ராப் ரெய்னர் (வயது 78). இவர் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வீட்டில் தனது மனைவி மிக்கேலுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் அவர்கள் இருவரும் வீட்டுக்குள் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். தகவலறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது இருவரது உடலிலும் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. இதனையடுத்து அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஹாலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ராப் ரெய்னர் கடந்த 1971-ம் ஆண்டு கதாநாயகனாக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் திஸ் இஸ் ஸ்பைனல் டேப், தி பிரின்சஸ் பிரைட் உள்பட பல படங்களை இயக்கி இயக்குனர், தயாரிப்பாளராகவும் மாறினார். இதன்மூலம் சிறந்த இயக்குனருக்கு வழங்கப்படும் கோல்டன் குளோப் விருதுகளை இவர் 4 முறை வென்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்