வேலை நேரம் குறித்த ரன்வீரின் சுவாரசிய கருத்துகள்...வீடியோ வைரல்

வேலைநேரம் குறித்து ரன்வீர் சிங் பேசிய பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.;

Update:2025-12-16 05:30 IST

சென்னை,

பாலிவுட் நட்சத்திர ஹீரோ ரன்வீர் சிங்கின் சமீபத்திய பிளாக்பஸ்டர் படமான 'துரந்தர்' பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆதித்யா தர் இயக்கியுள்ள இந்தப் படம் வெளியான 10 நாட்களில் ரூ. 300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது. படத்திற்கு வரும் நேர்மறையான விமர்சனங்களால் திரையரங்குகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையில், வேலைநேரம் குறித்து ரன்வீர் சிங் பேசிய பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசுகையில்,

"பல நேரங்களில் என் சக நடிகர்கள் எனது வேலை நேரம் குறித்து புகார் கூறுகிறார்கள். ஏனென்றால் நான் சில நேரங்களில் 10 முதல் 12 மணி நேரம் படப்பிடிப்பில் இருப்பேன். இதனால், அவர்களும் அப்படியே தொடர வேண்டும். இது அவர்களின் மற்ற படங்களின் அட்டவணையில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. ஆனால், சில நேரங்களில் படப்பிடிப்பை 8 மணி நேரத்தில் முடிக்க முடியாது. அதிக நேரம் வேலை செய்வதில் என்ன தவறு?" என்றார்.

ரன்வீரின் இந்தக் கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன. சமீபத்தில் அவரது மனைவியும் நடிகையுமான ​​தீபிகா படுகோனின் 8 மணி நேர வேலை கோரிக்கை பேசு பொருளானது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்