சிவராஜ்குமார், உபேந்திரா நடித்த “45 தி மூவி” படத்தின் டிரெய்லர் வெளியானது

இந்த படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.;

Update:2025-12-16 13:49 IST

சென்னை,

சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 45 தி மூவி. இந்த படத்தினை பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இயக்கியுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகி உள்ள இப்படத்தை சுரஜ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

பேண்டசி கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற 25ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், கிளிம்ப்ஸ், டீசர் ஆகியவை வெளியாகி வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில், தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்