ஸ்ருதி மேனனின் அடுத்த பட டைட்டில் வெளியீடு
இப்படத்தை அப்ரிட் ஷைன் இயக்குகிறார்.;
சென்னை,
மும்பையைச் சேர்ந்த ஸ்ருதி மேனன் மலையாள படங்களில் நடித்து வருகிறார். மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், அவரது அடுத்த பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ஸ்பா என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை அப்ரிட் ஷைன் இயக்குகிறார்.
மேலும், ஸ்பாவில் ராதிகா ராதாகிருஷ்ணன், ஸ்ரீஜா தாஸ், பூஜிதா மேனன், ரீமா தத்தா, ஸ்ரீலக்சுமி பட், சித்தார்த் பரதன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
சஞ்சூ ஜே தயாரித்துள்ள இப்படத்திற்கு ஸ்வரூப் பிலிப் ஒளிப்பதிவு செய்கிறார். இஷான் சாப்ரா இசையமைக்கிறார்.