’என் அம்மாவை உங்களால் திருப்பி கொடுக்க முடியுமா?’ - டிரோல்களை கடுமையாக சாடிய நடிகை

தவறான தகவல்களும் , டிரோல்களும் தனது தாயின் உடல்நிலையை கடுமையாக பாதித்ததாக நடிகை ஹேமா கூறினார்.;

Update:2025-11-25 07:24 IST

சென்னை,

தன்னை பற்றி பரவிய போலிச் செய்திகளால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே தனது அம்மா உயிரிழந்ததாக நடிகை ஹேமா கொல்லா கூறியுள்ளார். சில காலத்திற்கு முன்பு பெங்களூருவில் ஒரு ரேவ் பார்ட்டியில் ஈடுபட்டதாக நடிகை மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஹேமா சமீபத்தில் ஒரு உணர்ச்சிபூர்வமான வீடியோவை வெளியிட்டு, தனது வருத்தத்தை தெரிவித்தார். தவறான தகவல்களும் ஆன்லைன் டிரோல்களும் தனது தாயின் உடல்நிலையை கடுமையாக பாதித்ததை வெளிப்படுத்தினர்.

Advertising
Advertising

"கர்நாடக உயர் நீதிமன்றம் நவம்பர் 3 ஆம் தேதி என் மீதான வழக்கை தள்ளுபடி செய்தது. ஆனால், சமூக ஊடகங்களில் பரவிய டிரோல்கள் மற்றும் வதந்திகளால் என் அம்மா உடைந்து போனார். அது அவரது உடல்நிலையை கடுமையாக பாதித்தது.

நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று பலமுறை கூறியும் யாரும் கேட்கவில்லை. நான் இப்போது வழக்கில் வெற்றி பெற்றுவிட்டேன், ஆனால் என் அம்மா இப்போது என்னுடன் இல்லை. என்னை பற்றி பரவிய போலிச் செய்திகளைக் தாங்குக்கொள்ள முடியாமல் என அம்மா இறந்துவிட்டார். போலிச் செய்திகளை பரப்பியவர்கள் என் அம்மாவை திருப்பி கொடுப்பீர்களா?’ என்று தனது வருத்தத்தை தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்