’நான் அவருடைய மிகப்பெரிய ரசிகை’ - கீர்த்தி ஷெட்டி

கீர்த்தி ஷெட்டி தற்போது ''லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார்.;

Update:2025-11-25 08:42 IST

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி ஷெட்டி. தற்போது தமிழில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ''லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படம் டிசம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.

அதனை தொடர்ந்து கார்த்தியுடன் ‘வா வாத்தியார்’, ரவி மோகனுடன் ‘ஜீனி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில், வா வாத்தியார் படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகிறது. அதுமட்டுமில்லாமல், ஜீனி படமும் டிசம்பர் மாதத்தை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய கீர்த்தி ஷெட்டி, தான் கார்த்தி சாரின் மிகப்பெரிய ரசிகை என்றும் அவரது ’பையா’ படத்தை 100 முறைக்கு மேல் பார்த்திருப்பதாகவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்