வண்டலூர் பூங்கா யானையை தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்

6 மாதங்களுக்கு யானையின் பராமரிப்பு பணிக்கான செலவை சிவகார்த்திகேயன் ஏற்றுக் கொண்டுள்ளார்.;

Update:2026-01-19 20:02 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த ‛பராசக்தி’ படம் மக்கள் ஆதரவை பெற்று திரையரங்குகளில் வசூலை வாரி குவித்துவருகிறது.

இந்தநிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து பிரக்ருதி என்ற யானையை தத்தெடுத்துள்ளார். 6 மாதங்களுக்கு யானைக்கான உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளை அவரே வழங்குவார் என வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது

சிவகார்த்திகேயன் கடந்த ஆண்டு வண்டலூர் பூங்காவில் இருந்து ஒரு சிங்கத்தையும், ஒரு புலியையும் தத்தெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்