தனுஷ் - மிருணாள் தாக்கூர் குறித்த வதந்தி உண்மையா? வெளியான புதிய தகவல்

தனுஷும் நடிகை மிருணாள் தாகூரும் காதலித்து வருவதாக செய்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளன.;

Update:2026-01-19 13:50 IST

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் 2004 ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்தார். அவர்களுக்கு தற்போது இளம் வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு தனுஷும் ஐஸ்வர்யாவும் திருமண வாழ்க்கையிலிருந்து பிரிவதாக அறிவித்தனர்.

கடந்த சில மாதங்களாக தனுஷும் நடிகை மிருணாள் தாகூரும் காதலித்து வருவதாக செய்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளன. சில நிகழ்ச்சிகளில் அவர்கள் இருவரும் ஒன்றாகக் காணப்பட்டனர். ஒரு பேட்டியில் மிருணாள் தாகூர், “தனுஷ் என்னுடைய சிறந்த நண்பர்” என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தனுஷும் மிருணாள் தாகூரும் காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளப்போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. வட இந்தியாவில் இது செய்தியாகவும் வெளியான நிலையில், இதுபற்றி தனுஷோ அல்லது மிருணாள் தாகூரோ இதுவரை எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை. இதனால், “உண்மையிலேயே அப்படியிருக்குமோ?” என்ற கேள்வி திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக தனுஷுக்கு நெருக்கமான பிரபல பாலிவுட் இயக்குநர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளதாக ஆங்கில செய்தி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த இயக்குநர் கூறியதாவது:

“இப்படியொரு திருமணம் நடைபெறுவதாக தனுஷ் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. நாங்கள் தினமும் செல்போனில் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். யாருக்கும் தெரியாமல் அவர் எப்படி திருமணம் செய்துகொள்வார்?

விவாகரத்து நடந்தபோது, மகன்கள் யாத்ரா, லிங்கா விஷயத்தில் சேர்ந்து இருப்போம் என்று தனுஷும் அவரது முன்னாள் மனைவியும் முடிவு செய்தார்கள். தனுஷைப் பொறுத்தவரை, அவருக்கு இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லை. அதற்கு காரணம், தனது மகன்களுக்கு சித்தியாக ஒருவரை முன்னிறுத்த அவர் விரும்பவில்லை.

தனுஷ் - மிருணாள் தாகூர் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கும். ஆனால் அது திருமணத்தில் முடியும் என்று சொல்ல முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்