கோவை ஈசாவில் நடிகை சமந்தாவிற்கு 2வது திருமணம்

நடிகை சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோருவை இன்று அதிகாலை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.;

Update:2025-12-01 14:00 IST

கோவை,

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைதான்யாவை கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து, பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதன்பிறகு பல வருடங்களாக நண்பர்களாக பழகி வந்த சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இதற்கிடையில், நடிகை சமந்தா பிரபல இந்தி இயக்குநரான ராஜ் நிடிமொருவை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதற்கு இவர்கள் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. இவர்கள் இணைந்து பண்டிகைகளை சேர்ந்து கொண்டாடுவது , ராஜ் குடும்பத்தினரை சமந்தா சந்திப்பது என இருவரும் தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் புகைப்படஙகள் வெளியிட்டு வந்தனர். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என தகவல்கள் பரவி வந்தன.

இந்தநிலையில், நடிகை சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோருவை இன்று அதிகாலை கோவை ஈசா மையத்தில் உள்ள பைரவி கோவிலில் 2வது திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் சமந்தா பதிவிட்டுள்ளார்.  சமந்தாவிற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

"தி பேமிலி மேன்" வெப் தொடரின் இரண்டாவது சீசனில் சமந்தா நாயகியாக நடித்திருந்தார். அப்போதுதான் சமந்தாவுக்கும், ராஜுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. ராஜ் நிதிமோருவும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்