மீண்டும் இணைந்த ''டிஜே'' படக்குழு...அல்லு அர்ஜுன் எங்கே?
டிஜே படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து தனது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் பூஜா ஹெக்டே.;
சென்னை,
நட்சத்திர நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் டிஜே படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து தனது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
அந்த புகைப்படத்தில் டிஜெ இயக்குனர் ஹரிஷ் சங்கர், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் ஒளிப்பதிவாளர் அயனகா போஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதில் படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் இல்லை. இதனால் புகைப்படத்துடன் பூஜா, "அல்லு அர்ஜுன் எங்கே இருக்கீங்க?" என்று பதிவிட்டார். அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் விடுமுறையைக் கழித்துவரும் அல்லு அர்ஜுன் இந்த பதிவிற்கு "அடுத்த முறை நிச்சயமாக!" என்று பதிலளித்தார்.
2017-ல் வெளியான டிஜே படத்தில் அல்லு அர்ஜுன் ஒரு சமையல்காரராக நடித்திருந்தார். இந்த ஆக்சன் படத்தை தில் ராஜு தயாரித்தார். இது மிகப்பெரிய பிளாக்பஸ்டராகவும், பாக்ஸ் ஆபீஸில் ரூ. 150 கோடிக்கு மேலும் வசூலித்தது.