’ஜெயிலர் 2’ அப்டேட் கொடுத்த சிவராஜ்குமார்

திரையுலகங்களுக்கு இடையே நட்பை வலுப்படுத்தும் விதமாக கேமியோ கதாபாத்திரத்தில் நடிப்பதாக சிவராஜ்குமார் தெரிவித்தார்.;

Update:2025-12-22 16:44 IST

சென்னை,

கன்னட திரை உலகில் சூப்பர் ஸ்டார் ஆன சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘45 தி மூவி’. இந்த படத்தில் ராஜ் பி செட்டி, உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற 25ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், படத்தின் ரிலீஸையொட்டி நடிகர் சிவராஜ்குமார் புரமோஷன் பணியில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவராஜ்குமார், ’ஜெயிலர் 2’ பட அப்டேட் கொடுத்தார்.

’'ஜெயிலர் 2 படத்திற்காக ஒரு நாள் படப்பிடிப்பை முடித்துவிட்டேன், நாளை மீண்டும் படப்பிடிப்பு உள்ளது. ஜனவரி மாதத்தில் 3 நாட்கள் படப்பிடிப்பு உள்ளது. இது கிட்டத்தட்ட ஜெயிலர் படத்தின் தொடர்ச்சிபோல இருக்கும். முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது இதில் எனது கேமியோ கதாபாத்திரம் சற்று நீளமாக இருக்கும். இரு திரையுலகங்களுக்கும் இடையே நட்பை வலுப்படுத்தும் விதமாக இந்த கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்