தனுஷின் 55-வது பட அப்டேட் கொடுத்த 'அமரன்' இயக்குனர்
தனுஷின் 55-வது படத்தை 'அமரன்' பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார்.;
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்து வருகிறார். மேலும், 'இட்லி கடை' படத்தை இயக்கி நடித்து வரும் தனுஷ், ஒரு பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.
இதுமட்டுமில்லாமல், தனுஷின் 55-வது படத்தை 'அமரன்' பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த படத்தை `கோபுரம் பிலிம்ஸ்' அன்புசெழியன் தயாரிக்கிறார்.
இந்த நிலையில் தனுசுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து அப்டேட் கொடுத்திருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி. அதில் தனுஷின் 55வது படத்திற்கான பூஜை நடத்தப்பட்ட காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. மேலும், மகாசிவராத்திரியில் சிவபெருமானின் அருளைப் பெற்று அனைவரும் அமைதியுடனும் பாசிட்டிவ் எனர்ஜுயுடனும் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நற்றுணையாவது நமச்சிவாயவே என்றும் பதிவிட்டுள்ளார்.