“சிறை” நடிகரின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட அனிருத்
விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் அக்சய் குமார், ஐஸ்வர்யா சர்மா நடிக்கும் படத்திற்க்கு ‘ராவடி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.;
சென்னை,
‘சிறை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அக்சய் குமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இப்படத்தை இயக்குகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.
இத்திரைப்படத்தில் எல்.கே.அக்சய் குமார், ஜாபர் சாதிக், நோபல் கே.ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் , ஷாரீக் ஹாஸன் மற்றும் 'டியூட்' படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்நிலையில், அக்சய் குமார் நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்திற்க்கு ‘ராவடி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை அனிருத் வெளியிட்டுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி வருகிறது.