மோகன்லாலின் 367வது படம்.. யார் அந்த இயக்குனர்
மோகன்லாலின் 367வது படத்தை விஷ்ணு மோகன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.;
நடிகர் மோகன்லால் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான பத்மஸ்ரீ , பத்ம பூஷண் விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார். இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை, நடிகர் மோகன்லால் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மோகன்லால் நடிப்பில் இறுதியாக வெளியான எம்புரான், துடக்கம்,ஹிருதயப்பூர்வம் ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியாகப் பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன.மம்முட்டி – மோகன்லால் இணைந்து நடித்துள்ள ‘பேட்ரியாட்’ படம் வரும் ஏப்ரல் 23ம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில், மோகன்லாலின் 367வது திரைப்படத்தை இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு மோகன் மேப்படியான், கத இன்னுவர திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தைக் கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார்.
சமீபத்தில் கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் விளம்பர தூதுவராக நடிகர் மோகன்லால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மோகன்லாலை வைத்து சில விளம்பர படங்களை எடுக்கவும் கே.எஸ்.ஆர்.டி.சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.