"விஜயம் யார் வேண்டுமானால் செய்யலாம், ஆனால்... - நடிகர் பார்த்திபன்

நடிகர் பார்த்திபன் அரசியல் குறித்து கவிதை சொன்னது இணையத்தில் வைரலாகி வருகிறது.;

Update:2025-09-21 07:07 IST

சென்னை,

கோவையில் நடைபெற்ற ‘இட்லி கடை’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில், நடிகர் பார்த்திபன் அரசியல் குறித்து கவிதை சொன்னது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் கூறுகையில், "விஜயம் யார் வேண்டுமானால் செய்யலாம்...ஜெயம் உங்கள் கையில்தான் இருக்கிறது...ஆனால் நான்தான் சி.எம்'' என்றார்.

தனுஷ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் இட்லி கடை. தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில், ''நான்தான் சி.எம்'' என்ற என்ற படத்தை பார்த்திபன் இயக்கி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்