பாரதிராஜாவின் ''புலவர்'' பட பர்ஸ்ட் லுக் வீடியோவை வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்
தமிழ் திரையுலகின் முன்னோடி இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜா சமீபகாலமாக நடிகராக வலம் வருகிறார்.;
சென்னை,
பிரபல இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் உருவாகும் ''புலவர்'' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார்.
''16 வயதினிலே'', ''முதல் மரியாதை'', ''வேதம் புதிது'', ''கருத்தம்மா'' போன்ற பல புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கியவர் பாரதிராஜா. தமிழ் திரையுலகின் முன்னோடி இயக்குனர்களில் ஒருவரான அவர், சமீபகாலமாக நடிகராக வலம் வருகிறார்.
குரங்கு ''பொம்மை'', ''மகாராஜா'' போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். கடந்த 2022-ம் ஆண்டு ''திருச்சிற்றம்பலம்'' படத்தில் தனுஷுக்கு தாத்தாவாக அவர் நடித்திருந்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இயக்குனர் முருகைய்யா இயக்கத்தில், இயக்குனர் பாரதிராஜா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ''புலவர'' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோவை, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் வெளியிட்டுள்ளார்.
புதுமையான காட்சியமைப்பில் வெளியாகியுள்ள இந்த பர்ஸ்ட் லுக் வீடியோவானது இணையத்தில் தற்போது பகிரப்பட்டு வருகின்றது.