’அந்த விஷயத்தைப் பற்றி வீட்டில் பேசவே மாட்டேன்’..- ராஷ்மிகா மந்தனா

தற்போது ராஷ்மிகா இந்தி மற்றும் தெலுங்கில் ஒரு சில படங்களில் பிஸியாக உள்ளார்.;

Update:2025-12-06 20:02 IST

சென்னை,

தற்போது அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகிகளில் ராஷ்மிகா மந்தனாவும் ஒருவர். சமீபத்தில் வெளியான தி கேர்ள் பிரண்ட் படத்தின் மூலம் ராஷ்மிகாவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. தற்போது அவர் இந்தி மற்றும் தெலுங்கில் ஒரு சில படங்களில் பிஸியாக உள்ளார்.

இந்நிலையில், ஒரு சேனலுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், அவர் தனது தொழில் மற்றும் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

வீட்டில் தனது வேலையைப் பற்றிப் பேசவே மாட்டேன் என்று அவர் கூறினார். ஏதேனும் சிக்கல் இருக்கும்போது மட்டுமே தனது குடும்பத்தினரிடம் பேசுவதாகவும், உதவி அல்லது ஆலோசனையைப் பெறுவதாகவும் அவர் கூறினார். இல்லையெனில், வீட்டில் வேலை பற்றிப் பேசுவது தனக்குப் பிடிக்காது என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்