’சாய் பல்லவியின் அந்த போன்கால் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது’ - பிரபல இசையமைப்பாளர்
சமீபத்தில், ஒரு இசையமைப்பாளர் சாய் பல்லவியால் தனது வாழ்க்கை மாறிவிட்டதாக கூறினார்.;
சென்னை,
பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த சாய்பல்லவி இப்போது தவிர்க்க முடியாத நடிகையாகி இருக்கிறார். அவர் சில படங்களில் நடித்திருந்தாலும், அவர் மிகுந்த புகழைப் பெற்றுள்ளார்.
தமிழ், தெலுங்கில் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி, இப்போது இந்தியிலும் படங்களில் நடித்து வருகிறார். ராமாயணம் படத்தில் சீதையாக நடிக்கிறார். சமீபத்தில், ஒரு இசையமைப்பாளர் சாய் பல்லவியால் தனது வாழ்க்கை மாறிவிட்டதாக கூறினார்.
தெலுங்கில் இசையமைப்பாளராக இருப்பவர் சுரேஷ் பாபிலி . சமீபத்தில், அவர் ஒரு நேர்காணலில் சாய் பல்லவி பற்றி ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை வெளிப்படுத்தினார்.
அவர் பேசுகையில், ’ என் வாழ்க்கையையே முற்றிலுமா மாற்றிய படம் 'விராட பர்வம்'. அந்தப் படத்துல எனக்குக் குடிக்கிற பழக்கம் இருந்துச்சு. இயக்குனர் வேணு உடுகுலாவும் சாய் பல்லவியும் போன் பண்ணும்போதெல்லாம், நான் எடுக்கவே மாட்டேன்.
இதன் காரணமாக பின்னணி இசையை வேற யாருக்காவது கொடுக்க முடிவு பண்ணாங்க. நான் ஏற்கனவே கொஞ்சம் பின்னணி இசையமைச்சுட்டேன். சாய் பல்லவிக்கும் ராணாவுக்கும் அது பிடிச்சிருந்தது. ஒரு நாள், சாய் பல்லவி எனக்கு போன் பண்ணாங்க. படம் வெளியான பிறகு, உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். உங்களுக்கு நல்ல கெரியர் இருக்கிறது. வேணு சார் உங்களைப் பற்றி சில விஷயங்களைச் சொன்னார். அதையெல்லாம் விட்டுவிடுங்கள். உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. சிறிய விஷயங்களைப் பற்றி கவலைப்படாதீர்கள் என்று சாய் பல்லவி கூறினார். அவருடைய அந்த போன் கால் என் வாழ்க்கையை மாற்றியது. அதன் பிறகு நான் குடிப்பதை நிறுத்தினேன்’ என்றார்.