சினிமாவை பார்த்து மக்கள் கெட்டுப் போகிறார்களா..? நடிகர் பிருத்விராஜ் விளக்கம்

பிருத்விராஜ் இயக்கியுள்ள 'எல் 2 எம்புரான்' படம் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-03-23 20:57 IST

சென்னை,

நடிகர் பிருத்விராஜ் தமிழில் 'கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.மேலும், பிருத்விராஜ் மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இவரது நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'ஆடு ஜீவிதம்' மற்றும் 'குருவாயூர் அம்பலநடையில்' என்ற இரண்டு படங்களும் ரசிகர் மத்தியில் நல்ல வரவற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது இயக்குனராக 'எல் 2 எம்புரான்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, சினிமாவில் நடிக்கும் வன்முறை காட்சிகளை பார்த்து கேட்டுப் போகிறார்கள் என பொதுப்படையாக மக்கள் விமர்சிக்கிறார்கள் என பிருத்விராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெளிவான விளக்கமளித்துள்ளார்.

அதாவது, "சமூகத்தில் என்ன நடந்தாலும் சினிமாவைப் பார்த்து கெட்டு போய்விட்டார்கள் என்று சொல்கின்றனர். ஆனால் சினிமாவே சமூகத்தின் பிரதிபலிப்பு தான் என்பதை மறந்துவிடுகிறார்கள். சினிமா ஒன்றும் காற்றில் இருந்து உருவாக்கப்படவில்லை. அதில் இருக்கும் கதாபாத்திரங்கள், கதைகள் எல்லாம் சமுதாயத்தில் நடப்பவை தான். சினிமா ஒரு கற்பனை என்றால் அந்த கற்பனை உருவாவது உங்களைச் சுற்றிய உலகத்தில் இருந்துதான்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்