அர்ஜுன் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது - ரசிகர்கள் ஆர்வம்

’தீயவர் குலை நடுங்க’ திரைப்படம் வரும் 21 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.;

Update:2025-11-13 01:55 IST

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் அர்ஜுன். ஆக்சன் கிங் என அழைக்கப்படும் அர்ஜுன் நடிப்பில் வெளியான 'ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், கர்ணா, முதல்வன்' உள்பட பல்வேறு படங்கள் பெரும் வெற்றிபெற்றன. சமீபகாலமாக அவர் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே, தினேஷ் லட்சுமணன் எழுதி , இயக்கியுள்ள தீயவர் குலை நடுங்க திரைப்படத்தில் அர்ஜுன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

இந்நிலையில், அர்ஜுன் நடித்துள்ள ’தீயவர் குலை நடுங்க’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இன்று மாலை 6 மணிக்கு ’தீயவர் குலை நடுங்க’ டிரெய்லர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளார். அர்ஜுன் படத்தின் டிரெய்லரை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமடைந்துள்ளனர்.  ’தீயவர் குலை நடுங்க’ திரைப்படம் வரும் 21 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்