’ஆண்களுக்கு அந்த 2 பிரச்சினைகள் மட்டும்தான், ஆனால் பெண்களுக்கு...- அனு இம்மானுவேல்
அனு இம்மானுவேல், தற்போது “தி கேர்ள்பிரண்ட்” படத்தில் நடித்துள்ளார்.;
சென்னை,
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து பெயர் பெற்ற அனு இம்மானுவேல், தற்போது ராகுல் ரவீந்திரன் இயக்கிய “தி கேர்ள்பிரண்ட்” படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் அவர் துர்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் இப்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், அனு இம்மானுவேல் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் அதில்,
"பெண்கள் நிறைய சவால்களை எதிர்கொள்கிறார்கள். எப்படிப் பேச வேண்டும், என்ன உடை அணிய வேண்டும், எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும், எப்போது குழந்தைகளைப் பெற்க வேண்டும். ஆனால், ஆண்கள் வேலை மற்றும் வருமானம் குறித்த பிரச்சினைகளை மட்டுமே எதிர்கொள்கிறார்கள்" என்று அவர் கூறினார்.