'மா வந்தே' - பிரதமர் மோடியின் தாயாக நடிப்பது இந்த நடிகையா?
இதில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மோடியாக நடிக்கிறார்.;
சென்னை,
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு 'மா வந்தே' என்ற திரைப்படம் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மோடியாக நடிக்கிறார். வீர் ரெட்டி தயாரிக்கும் இத்தப் படத்தை கிராந்திகுமார் இயக்குகிறார்.
இதற்கிடையில், ஒரு நட்சத்திர கதாநாயகி இதில் மோடியின் தாயாக நடிப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடிக்கு தனது தாயார் ஹீராபென் மீது மிகுந்த அன்பு உண்டு. அவர் எவ்வளவு பிளியாக இருந்தாலும், எப்போதும் தனது பிறந்தநாளை தனது தாயாருடன் கொண்டாடுவார்.
இந்நிலையில், இப்படத்தில் பிரதமர் மோடின் தாய் ஹீராபென்னாக பிரபல பாலிவுட் நடிகை ரவீனா தாண்டன் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.