''சிக்கந்தர்'' தோல்விக்கு என்ன காரணம் ? - ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்
ஏ.ஆர். முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி படத்தை இயக்கி இருக்கிறார்.;
சென்னை,
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் சமீபத்தில் ''சிக்கந்தர்'' திரைப்படத் தோல்வி குறித்து பேசியுள்ளார். அந்தப் படத்தின் கதை தன் மனதுக்கு மிகவும் நெருக்கமானது என்றாலும், அதை திரையில் சரியாக வெளிப்படுத்த முடியவில்லை என அவர் ஒப்புக்கொண்டார்.
ஆனால், படத் தோல்விக்கு தான் மட்டுமே காரணம் இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார். கஜினி ஒரு ரீமேக் படமாக இருந்தாலும், சரியான முறையில் எடுத்து வந்ததால் அது வெற்றி பெற்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஏ.ஆர். முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது.