சிம்புவின் “அரசன்” படப்பிடிப்பு வீடியோ வெளியீடு

‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சிம்புவுடன் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.;

Update:2025-12-21 18:43 IST

சென்னை,

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ‘அரசன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வடசென்னை கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சமுத்திரகனி , கிஷோர் , விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். 

கோவில்பட்டியில் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கி இருக்கிறது. ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சிம்புவுடன் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் ’டூரிஸ்ட் பேமிலி’ பட நடிகை யோகலட்சுகியும் காணப்படுகிறார். இதன் மூலம் அரசன் படத்தில் அவர் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. தென்மாவட்டங்களில் சிலம்பரசனின் வருகை அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், சிம்புவின் “அரசன்” படப்பிடிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்