“அவதார் பயர் அண்ட் ஆஷ்” படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ படம் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.;
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ‘அவதார்’ படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. வசூலிலும் சாதனை நிகழ்த்தி 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது. 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’ சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்தது.
அவதார் படத்தின் மூன்றாம் பாகமான ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ படத்தில் சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கேட் வின்ஸ்லெட், கிளிப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், எடி பால்கோ மற்றும் திலீப் ராவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இப்படம் கடந்த 19ம் தேதி வெளியானது.
இந்நிலையில், ஜேம் கேமரூனின் ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ படம் 2 நாட்களில் உலகளவில் ரூ. 1300 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.