வள்ளுவர் கோட்டத்தில் “பராசக்தி” கண்காட்சி நீட்டிப்பு

‘பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பு பொருள்காட்சியை இலவசமாக வரும் 25ம் தேதி வரை கண்டுகளிக்கலாம் என படக்குழு அறிவித்துள்ளது.;

Update:2025-12-21 17:51 IST

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம்,‘பராசக்​தி’. இது சிவகார்த்திகேயனின் 25வது படம். ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாக உள்ளது.

இதனிடையே இப்படத்தின் அடி அலையே, ரத்னமாலா, நமக்கான காலம் பாடல்கள் வெளியாகி நல்ல பெற்று வருகிறது. திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரோமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 18ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி படத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மொத்த படக்குழுவும் கலந்து கொண்டு தங்களது அனுபவத்தை பகிர்ந்தனர்.

இப்​படத்​தில் 60-களின் கால​கட்​டத்​தைக் கொண்டு வர பயன்​படுத்​தப்​பட்டகார்​கள், ரயில், ரயில் நிலைய செட் மற்​றும் அந்​தக்​கால பொருட்​களை வைத்​து, ‘பராசக்​தி’ பட உலகை செட் மூலம் வள்​ளுவர் கோட்​டத்​தில் உயிர்ப்​பித்​துள்​ளனர். பொது​மக்​கள் பார்​வை​யிடும் வகை​யில் இது கண்​காட்​சி​யாக உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. 

இந்​நிலை​யில், பழைய காலத்துக்கான பொருள்கள் அடங்கிய ‘பராசக்தி’ கண்காட்சியை வரும் 25ம் தேதி வரை இலவசமாக பார்வையிடலாம் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின் குடும்பத்தினர் ‘பராசக்தியின் உலகம்’ கண்காட்சிக்கு வந்து பார்வையிட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ‘பராசக்தி’ கண்காட்சியை ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டு வருவதாக இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்