அருள்நிதியின் “அருள்வான்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘அருள்வான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.;

Update:2026-01-16 08:49 IST

சென்னை,

அருள்நிதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். 'வம்சம், மவுனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'டிமான்டி காலனி 2' படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் சமீபத்தில் நடித்த "ராம்போ"படம் சன்நெக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது

‘தேன்’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் கணேஷ் விநாயக். அடுத்ததாக புதிய படமொன்றை இயக்கி வந்தார். இதன் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது. தற்போது இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறது படக்குழு.

‘அருள்வான்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக சுகுமார், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படத்தினையும் ‘தேன்’ படம் போல திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப இயக்குநர் கணேஷ் விநாயக் முடிவு செய்திருக்கிறார்.

‘அருள்வான்’, ‘டிமாண்டி காலனி 3’, ‘மை டியர் சிஸ்டர்’ என 3 படங்களை முடித்துவிட்டார் அருள்நிதி. இதில் ‘அருள்வான்’ படத்தின் பணிகள் அனைத்துமே முடித்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. மீதி இரண்டு படங்களின் இறுதிகட்டப் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்