அருள்நிதியின் புதிய பட டைட்டில் அறிவிப்பு

பிரபு ஜெயராம் இயக்கத்தில் அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடித்துள்ள புதிய படத்திற்கு ‘மை டியர் சிஸ்டர்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.;

Update:2025-11-11 18:19 IST

சென்னை,

அருள்நிதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். 'வம்சம், மவுனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'டிமான்டி காலனி 2' படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் சமீபத்தில் நடித்த "ராம்போ"படம் சன்நெக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது தமிழில் ‘சிவப்பதிகாரம்', ‘குரு என் ஆளு', ‘தடையறத் தாக்க', ‘எனிமி', ‘மகாராஜா' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ். 

பிரபு ஜெயராம் இயக்கத்தில் அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் புதிய படத்தில் நடித்துள்ளனர். இதை ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற படத்தை இயக்கிய பிரபு ஜெயராஜ் இயக்கியுள்ளார். பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்ளார்.

இப்படம் குறித்து மம்தா மோகன்தாஸ் “அருள்நிதிக்கு அக்காவாக இந்த படத்தில் நடித்து இருக்கிறேன். அசாத்தியமான ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை சொல்லும் கதை. படத்தில் நான் டக்கர் வண்டி ஓட்டும் டிரைவராக நடித்துள்ளேன். சினிமாவில் இது எனக்கு 20-வது வருடம்” என்றார்.

இந்நிலையில், படத்தின் புரோமோ டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு ‘மை டியர் சிஸ்டர்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்