மீண்டும் ரிலீசாகும் "அவதார் : தி வே ஆப் வாட்டர்" திரைப்படம்

அக்டோபர் 2ம் தேதி 'அவதார்: தி வே ஆப் வாட்டர்' படத்தை மறு வெளியீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-09-20 09:42 IST

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 'அவதார்' படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. படத்தில் இடம்பெற்று இருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார்: தி வே ஆப் வாட்டர்' என்ற பெயரில் வெளியானது.இந்த படம் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் இது ஒன்றாகும். முதல் பாகம் காடுகளின் பின்னணியிலும், இரண்டாம் பாகம் நீரின் பின்னணியிலும் இருந்தது. தற்போது இதன் 3ம் பாகம் அவதார் பயர் அண்ட் ஆஷ் என்ற தலைப்பில் வெளிவருகிறது. நெருப்பின் பின்னணியில் உருவாகி உள்ள இப்படம் வருகிற டிசம்பர் 19ம் தேதி வெளிவருவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 20யத் சென்ச்சுரி ஸ்டுடியோஸ், அக்டோபர் 2ம் தேதி 'அவதார் : தி வே ஆப் வாட்டர்' படத்தை மறு வெளியீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. அவதார் படம் வெளிவருதற்கு முன்பு அதன் முந்தைய படத்தை மறு வெளியீடு செய்வது ஜேம்ஸ் கேமரூனின் வழக்கம். புதிய பாகத்தை புரிந்து கொள்ள முதல் பாகத்தை மீண்டும் ஒரு முறை மக்கள் பார்க்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

Tags:    

மேலும் செய்திகள்