நீண்ட நாள் காதலருடன் நடிகை அவிகாவுக்கு நிச்சயதார்த்தம் - வைரலாகும் புகைப்படம்
நீண்டநாள் காதலர் மிலிந்த் சந்த்வானியுடன் நடிகை அவிகா கோருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.;
சென்னை,
''பாலிகா வது'' என்ற இந்தி தொலைக்காட்சி தொடரின் மூலம் புகழ் பெற்ற பிரபல நடிகை அவிகா கோர் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
நீண்டநாள் காதலர் மிலிந்த் சந்த்வானியுடன் நடிகை அவிகா கோருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்களை நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானநிலையில், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
நடிகை அவிகா கோர், கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ''பாலிகா வது'' என்ற இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர். அதில் ஆனந்தி வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது இந்தி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.