பரத்தின் "காளிதாஸ் 2" டீசர் வெளியானது
ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான படம் ‘காளிதாஸ்’;
சென்னை,
'பாய்ஸ்' படத்தில் டீன் ஏஜ் இளைஞனாக ஸ்டைலிஷ் ஆங்கிலம் பேசியபடி நடித்து கவனம் ஈர்த்தவர் பரத். 'காதல்' படத்தின் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு பரத் 'காளிதாஸ்' என்ற திரில்லர் படத்தில் நடித்து இருந்தார். போலீஸ் அதிகாரியாக நடித்த அந்தப்படம் மக்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. அந்தப்படத்தினை ஸ்ரீ செந்தில் இயக்கினார். அப்படத்தில் ஆன் ஷீத்தல், சுரேஷ் மேனன் மற்றும் ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.
தற்போது, 'காளிதாஸ்' 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், படம் ரிலீஸ்க்கான முந்தைய பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 'காளிதாஸ் 2' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.