'தக் லைப்' படத்தில் நடிக்கவில்லை - பிரபல பாலிவுட் நடிகர் மறுப்பு
’தக் லைப்’ படம் நாளை வெளியாக உள்ளது.;
மும்பை,
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள கேங்ஸ்டர் ஆக்சன் படமான 'தக் லைப்' நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் சிம்பு,திரிஷா, அசோக் செல்வன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும், நீண்ட காலமாக, பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதி இந்த படத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி வந்தன.
இந்நிலையில், பங்கஜ் திரிபாதி அதனை நிராகரித்துள்ளார். நேர்காணலில், பேசிய பங்கஜ் திரிபாதி, அது வெறும் வதந்திதான் எனவும் 'தக் லைப்' படத்தில் எந்த கதாபாத்திரத்திலும் தான் நடிக்கவில்லை எனவும் கூறினார்.