‘காந்தா’ படத்துக்கு எதிரான வழக்கு: ரசிகரின் கேள்விக்கு ராணா கொடுத்த நச் பதில்

காந்தா பட நடிகரும், தயாரிப்பாளருமான ராணா டகுபதி தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.;

Update:2025-11-14 12:49 IST

சென்னை,

துல்கர் சல்மான் நடிப்பில் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காந்தா’ படம் இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தில் பாக்யஸ்ரீ , துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், காந்தா திரைப்படத்துக்குத் தடை கோரி பாகவதரின் மகள் வழி பேரன் சென்னை உரிமையியல் நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கு வருகிற 18-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தயாரிப்பு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertising
Advertising

இதனிடையே, காந்தா பட நடிகரும், தயாரிப்பாளருமான ராணா டகுபதி தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, “’காந்தா’ படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருக்கிறார்களே. அது குறித்து உங்கள் கருத்து” என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ராணா டகுபதி, “அது அடிப்படை ஆதாரமற்றது. இப்படத்தில் உண்மையான விஷயங்கள் எதுவுமே கிடையாது. நவம்பர் 14-ம் தேதி திரையரங்கில் படத்தைப் பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் இப்படம் தியாகராஜ பாகவதர் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் அல்ல என்று தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்