ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் பிரசன்னா-சினேகா சாமி தரிசனம்

நடிகை சினேகா நேற்று திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.;

Update:2025-11-14 09:00 IST

திருப்பதி,

சிரிப்பின் அழகில் ரசிகர்களை மயக்கிய புன்னகை அரசியாக கொண்டாடப்பட்டவர் நடிகை சினேகா. இவர் சினிமாவில் டாப் நாயகியாக இருந்த போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்த நட்சத்திர ஜோடிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இந்தநிலையில், நடிகர் பிரசன்னா, நடிகை சினேகா ஆகியோர் நேற்று திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். மேலும் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் பங்கேற்றனர். தொடர்ந்து மூலவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். பிரசாதம், சாமி படம் வழங்கினர். வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்