சக நடிகரின் தங்க சங்கிலியை அறுத்த நடிகை

‘ரஜினி கேங்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.;

Update:2025-11-14 07:02 IST

சென்னை,

ரஜினி கிஷன் தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம், ‘ரஜினி கேங்'. திவிகா, முனீஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், கல்கி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை எம்.ரமேஷ்பாரதி இயக்கியுள்ளார். சென்னையில் நடந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் திவிகா பேசுகையில், ‘‘நான் மலையாளி என்பதால், அசர வைக்கும் தமிழ் பேச்சு வராது. இன்னொரு மாநிலத்தில் இருந்து வந்தவள் என்றும் பாராமல், எனக்கு இப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்த படக்குழுவுக்கு நன்றி.

படம் தொடங்கிய சமயத்தில் எனக்கும், ஹீரோவுக்கும் சில குழப்பங்கள் ஏற்பட்டது. பின்னர் இருவரும் கலந்துபேசி ஒரு முடிவுக்கு வந்தோம். இது படப்பிடிப்பில் எல்லோருக்கும் நடக்கும் ஒரு நிகழ்வுதான்.

படத்தில் ஒரு காட்சியில் சக நடிகர் அணிந்திருந்த தங்க சங்கிலியை தெரியாமல் பிடித்து இழுத்து அறுத்துவிட்டேன். அது எனக்கு மன வருத்தம் தந்தது. படம் ‘ஹிட்' ஆனால் புதிய தங்க சங்கிலியை அவருக்கு வாங்கித்தருவேன்'', என்றார்.

அவரது இந்த பேச்சு கலகலப்பூட்டியது.

Tags:    

மேலும் செய்திகள்