’பேட் கேர்ள்’ படத்தை பாராட்டிய பிரபல நடிகை
இவரின் பாராட்டுகள் இப்போது இணையத்தில் பரவி வருகிறது.;
சென்னை,
அஞ்சலி சிவராமன் நடிப்பில் வர்ஷா பரத் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படமான ’பேட் கேர்ள்’, தற்போது தமிழ் உட்பட பல மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது.
நடிகை சோபிதா துலிபாலா இப்படத்தைப் பார்த்துவிட்டு சமூக ஊடகங்களில் தனது பாராட்டை பகிர்ந்துள்ளார். இந்தப் படம் தன்னை சிரிக்கவும், கண்ணீர் வர வைத்ததாகவும் அவர் தெரிவித்தார். இப்படத்தை குறிப்பாக பெண்களுக்கு, பரிந்துரைப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
சோபிதாவின் பாராட்டுகள் இப்போது இணையத்தில் பரவி வருவதால், இந்தப் படம் அதிக கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.