சர்ச்சை பேச்சு - நடிகர் விஜய் தேவரகொண்டா விளக்கம்
இந்தியா - பாகிஸ்தான் விவகாரம் குறித்து விஜய் தேவரகொண்டா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.;
சென்னை,
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் கடந்த 26-ம் தேதி ஐதராபாத்தில் நடந்த 'ரெட்ரோ' படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அப்போது அவர் இந்தியா - பாகிஸ்தான் விவகாரம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து அவர் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சர்ச்சை பேச்சுக்கு நடிகர் விஜய் தேவரகொண்டா விளக்கம் கொடுத்துள்ளார்.
அதன்படி அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ரெட்ரோ நிகழ்வில் நான் தெரிவித்த ஒரு கருத்து மக்களிடையே கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு நான் எனது மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எந்த ஒரு உள்நோக்கமும், யாரையும் புண்படுத்தவும், எந்த ஒரு சமூகத்தையும் குறி வைத்தும் நான் பேசவில்லை' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.